உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

சுவர் விழுந்து தொழிலாளி பலிஅலங்காநல்லுார்: வலசை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. அவரது பழைய வீட்டை இடிக்க, நேற்று காலை அதேபகுதி தொழிலாளர்கள் அருவிமலை 35, கார்த்திக் 35, கருப்பசாமி 32, ஆகியோரை அழைத்துச் சென்றார். வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்களும் சிக்கினர். அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் அருவி மலை இறந்தார். கார்த்திக், கருப்பசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை