போலீஸ் செய்தி
கஞ்சா பறிமுதல்: தண்டனை
மதுரை: மதுரை ராஜாக்கூர் அருண்பாண்டியன்29, சுப்பிரமணி25, முத்துக்குமார் 29, வண்டியூர் மணிகண்டன் 33. இவர்கள் ஆட்டோவில் 23 கிலோ கஞ்சா கடத்தியபோது கோச்சடையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி செங்கமலச்செல்வன் நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார்.