உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

* செய்தியாளர் விபத்தில் பலி

மேலுார்: பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் தர்மராஜன் 58, நாளிதழ் செய்தியாளர். இவருக்கு சாந்தி என்ற மனைவி, ரஞ்சித் குமார், தரணி, யோகி என்ற மூன்று மகன்கள் உள்ளனர். தர்மராஜன் நேற்று மதியம் மேலுாரில் இருந்து பெருமாள்பட்டிக்கு டூ வீலரில் சென்றார். மலம்பட்டி அருகே பின்னால் சென்ற அரசு பஸ் மோதி இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.--

* போக்சோ வழக்கு

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் செல்லப்பாண்டி 31, அரிசிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சோழவந்தான் அருகே உள்ள ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்கு அரிசி மூடை இறக்க சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிடவே தப்பினார். சமயநல்லுார் மகளிர் போலீசார் செல்லபாண்டி மீது போக்சோ வழக்குப் பதிவுசெய்து தேடி வருகின்றனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !