உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சக்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

சக்குடியில் மக்கள் தொடர்பு முகாம்

மதுரை : மதுரை கிழக்கு தாலுகா சக்குடியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவிபால், டி.ஆர்.ஓ., சக்திவேல், மேலுார் ஆர்.டி.ஓ., ஜெயந்தி, சமூகபாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சங்கீதா, வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜா, தாசில்தார் பழனிக்குமார், ஊராட்சித் தலைவர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். 145 பயனாளிகளுக்கு ரூ.20.28 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கலெக்டர் பேசுகையில், 'ஊரகப்பகுதி மக்கள் தங்கள் ஆதார், குடும்ப அட்டை உட்பட பலவற்றையும் தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு நலத்திட்டங்கள் பயனாளியின் வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கை துவக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை