உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலத்தில் கொட்டிய மழை

திருமங்கலத்தில் கொட்டிய மழை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று முன்தினம் மாலை அதிகளவாக 67.20 மி.மீ., மழை பெய்தது.மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு: விமான நிலையம் 17.80, விரகனுார் 1.20, மதுரை வடக்கு 16.80, சிட்டம்பட்டி 24.60, இடையபட்டி 4.20, கள்ளந்திரி 52, மேலுார் 5, புலிப்பட்டி 27.60, தனியாமங்கலம் 10, சாத்தையாறு அணை 20, மேட்டுப்பட்டி 19.40, திருமங்கலம் 67.20.

அணைகளில் நீர்மட்டம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் 2421 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 96 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.வைகை அணையின் நீர்மட்டம் 47.70 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 1706 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 47 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சாத்தையாறு அணையின் நீர்மட்டம் 8.90 அடி (மொத்த உயரம் 29 அடி). அணையில் 6.32 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் இல்லை.

மழை பலிக்கு நிவாரணம்

இடி விழுந்ததில் மேலுார் சென்னகரம்பட்டி விவசாயி மகேந்திரன் 47, பலியானார். அவரது குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கையை கலெக்டர் சங்கீதா, பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் பிரபாகரன் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை