உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வயலுார் மந்தையில் மழைநீர்

வயலுார் மந்தையில் மழைநீர்

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் வயலுார் ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் பெய்த மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியுள்ளது.இப்பகுதி கிராமப்பகுதிகள் மற்றும் நகரி, குமாரம் மெயின் ரோடு மற்றும் அலங்காநல்லுார் கள்வேலிப்பட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு மரக்கிளைகள் ஆங்காங்கே ஒடிந்து விழுந்தன. கருப்புசாமி கோயில் முன்பாக கடந்த மாதம் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது. இதனால் இங்குள்ள மந்தை களம், தெரு பகுதிகள் பள்ளமாயின. மழைநீர் வெளியேற வழிவகை செய்யாததால் மந்தையில் அரை அடிக்கு மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்காமல் வெளியேற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை