| ADDED : ஆக 02, 2024 05:00 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதி தமிழ்த் துறை சார்பில் 87வது வாசகர் வட்டம் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி முத்துமாரி வரவேற்றார்.பெ.தெய்வம் எழுதிய பலாச்சுளை கவிதை நுாலை வணிகவியல் நிறுமச் செயலறியல் துறை மாணவி சக்தி ஹரிணி, புதுமைப்பித்தன் சிறுகதைகள் நுாலை தமிழ்த்துறை மாணவி ஜனனி, அப்பாதுரையாரின் குமரிக்கண்டம் நுாலை மாணவர் லோகேஷ் பிரபு மதிப்புரை செய்தனர். மாணவர் சுந்தரபாண்டி நன்றி கூறினார். மாணவர் வாசிமலை கண்ணன் தொகுத்து வழங்கினார். துறை தலைவர் பரிமளா, விழா ஒருங்கிணைப்பாளர் ரிஸ்வானா பர்வீன் ஏற்பாடு செய்தனர்.