உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை மீட்பு மைய பணிக்கு ஆள்தேர்வு

போதை மீட்பு மைய பணிக்கு ஆள்தேர்வு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்பு மையத்தில் கவுன்சிலர்/ சைக்காலஜிஸ்ட், சமூகப்பணியாளர் (சைக்கிரியாட்ரிக் சோஷியல் ஒர்க்கர்), செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற தகுதியானவர்கள் ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்ப படிவங்களை madurai.nic.in/notice-category recruitment என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்திசெய்த படிவத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஆக.31 க்குள் வழங்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 0452- 264 0778 ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வலுவலக இ மெயில் முகவரி gmail.com. ஏற்கனவே விண்ணப்பித்த பழைய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ