உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரெட் கிராஸ் நிறுவனர் பிறந்தநாள் ; கலெக்டர் சங்கீதா பங்கேற்பு

ரெட் கிராஸ் நிறுவனர் பிறந்தநாள் ; கலெக்டர் சங்கீதா பங்கேற்பு

ரெட் கிராஸ் நிறுவனரின் பிறந்தநாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் மரக்கன்றுகளும் நட்டார் இது பற்றிய விவரம் வருமாறு ரெட் கிராஸ் சொசைட்டியின் நிறுவனர் ஜீன் ஹென்றி டூணான்ட் பிறந்தநாளானமே 8 உலகம் முழுவதும்உலக ரெட்கிராஸ் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட தலைவருமான திருமதி மா.சௌ.சங்கீதா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டூணான்ட் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கேக் வெட்டியும் மரக்கன்று நட்டும் ரெட்கிராஸ் நாள் கொண்டாடப்பட்டது. மதுரை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் தலைவர் நெல்லை பாலு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார்.முன்னதாக மாணவ மாணவிகளின் சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டியை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை