உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம் வழங்கல்

வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம் வழங்கல்

மதுரை,: மதுரையில் நடந்த 27 வது எல்.ஐ.சி., ஓய்வூதியர் சங்க மாநாட்டில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணமாக ரூ.50ஆயிரம் வழங்கப்பட்டது.மாநாட்டில் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் அறிக்கையையும், பொருளாளர் சேதுராமன் வரவு செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஒய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் குன்னி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைவராக கோபாலகிருஷ்ணன், செயலாளராக சேகர், பொருளாளர் மகாலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்சூரன்ஸ் பிரீமியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை

இம்மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி கண்ணன் ரூ.10 லட்சத்திற்கான வரைவோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் கூறுகையில், ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையுடன் நாங்கள் வழங்கிய மருத்துவக் குழுவின் சேவை நிவாரணப் பணிகளுக்கு துணையாக இருக்கும். வயநாடு விரைவில் இயல்புநிலைக்கு திரும்பும். அரசுக்கும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கும் எல்லா வழிகளிலும் தொடர்ந்து உதவுவோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை