உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்

ஓய்வு பேராசிரியர்கள் வயநாடு நிவாரணம்

மதுரை, : மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக மதுரை கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை சமர்ப்பித்தார்.கூட்டத்தில் வயநாடு நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். அகில இந்திய ஓய்வூதியர் சங்க புரவலர் பார்த்தசாரதி, பேராசிரியர்கள் கிருஷ்ணன், ராமமூர்த்தி உட்பட பலர் பேசினர். பொதுச் செயலாளர் மனோகரன் ஓய்வூதியர் சங்கம் சார்பில் வயநாடு நிவாரண பணியாக ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் நிதி வழங்கியதாக கூறினார்.சென்னையில் ஆக.,28 ல் நடக்க உள்ள போராட்டத்தில் மதுரை கிளை சார்பிலும் பங்கேற்க வேண்டும். ஓய்வூதியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராசிரியர் ஜெகநாதன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் ராஜேந்திரன், சண்முகசுந்தரம், விஜயன், லட்சுமணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி