உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் வாபஸ்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம் வாபஸ்; உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம் வீரபாண்டியபுரம் கலையரசன் தாக்கல் செய்த பொதுநல மனு:சாத்துார் பகுதியில் சட்டவிரோத கனிமவள திருட்டை தடுக்கத்தவறியதோடு கவனக்குறைவாக செயல்பட்டதாக தாசில்தார் உள்ளிட்ட 7 வருவாய்த்துறை அலுவலர்களை கலெக்டர் சஸ்பெண்ட் செய்தார். இதற்கு எதிராக விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து அதிகாரியிடம் மேல்முறையீடு செய்து தீர்வு காண வேண்டும். மாறாக மக்களை பாதிக்கும் வகையில் போராடுகின்றனர். ஜாதி, வருமானம், பிறப்பு, வாரிசு சான்றுகள் பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அனைவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் மார்ச் 7க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ