உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு மறியல்: 80 பேர் கைது

ரோடு மறியல்: 80 பேர் கைது

திருமங்கலம் : செக்கானுாரணி அருகே வடக்கம்பட்டி, வடக்கம்பட்டி காலனி, பாலுத்துப்பட்டி, இந்திரா நகர், மும்மூர்த்தி நகர், திருவள்ளுவர் காலனி, கலுவனாதபுரம் பகுதி வீடுகளுக்கு முறையாக மின்சாரம் வழங்காததை கண்டித்தும், கூடுதல் திறனுள்ள டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருமாத்துார் அருகே கோட்டையூர் விலக்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய குழு குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட குழு முத்துப்பாண்டி ஒன்றிய குழு காசி கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை