உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.டி.எம்.,ல் ரூ.20 லட்சம் கொள்ளை டில்லியில் கொள்ளையன் கைது

ஏ.டி.எம்.,ல் ரூ.20 லட்சம் கொள்ளை டில்லியில் கொள்ளையன் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில், ஸ்டேட் வங்கியின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. 6ம் தேதி அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது.குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்த 20 லட்சம் ரூபாய் கொள்ளை போனதும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.அவர்களை பிடிக்க ஹரியானா மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் சென்றனர். கொள்ளையில் சம்பந்தபட்ட நபர் டில்லியில் இருப்பதாக கிடைத்த தகவல்படி போலீசார் டில்லி சென்று அந்த நபரை பிடித்தனர்.விசாரணையில் ஹரியானா மாநிலம் மேவாத் மாவட்டம் ஜடோலியைச் சேர்ந்த ஜாவித் 30, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ