உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?

25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி?

தெப்பக்குளம் : மதுரை, யாகப்பா நகர் பாண்டியன், 45; மினி சரக்கு வேன் டிரைவர். தெப்பக்குளம் பகுதி ராமகிருஷ்ணனிடம், 2021ல், 25,000 ரூபாய் கடன் வாங்கி மாத தவணை செலுத்தி வந்தார். பின், தவணை செலுத்த கால தாமதம் ஆனதால், வட்டிக்கு மேல் வட்டி போட்டு, 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த பாண்டியன், கடந்த மே 18ம் தேதி மனைவியின் 3 சவரன் செயினை அடகு வைத்து 35,000 ரூபாயை ராமகிருஷ்ணனிடம் தந்தார். 'இத்தொகையை வட்டியில் கழித்துக்கொள்கிறேன். 15 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்' என அவர் மிரட்ட, பயந்து போன பாண்டியன் விஷம் குடித்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ராமகிருஷ்ணன் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

johnson ebenezer
செப் 13, 2024 19:41

மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் திருமோகூர் சாலையில் சொர்ண மீனா நகர் 2ஆவது 3வது தெருக்களில் மார்டன் பள்ளி தெரு காந்தி நகர் தெருக்களில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆகிய நிலையில் இதுவரை தார் சாலை அமைப்பதற்காக என்று எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் சாலையில் பரப்பப்பட்ட கிரஷ்ஸர் தூசி காற்றில் பறந்து வந்து வீடுகளுக்குள் அதிக அளவில் காணப்படுகிறது இதனால் இப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் சிறமப்படுகிறோம் தயவுசெய்து விரைவாக சாலை அமைப்பதற்காக ஏற்பாடுகள் செய்ய உதவுங்கள் நன்றி


முக்கிய வீடியோ