உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதை உற்பத்தி பயிற்சி

விதை உற்பத்தி பயிற்சி

மதுரை: செல்லம்பட்டி கட்டதேவன்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். திட்ட ஆலோசகர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி செய்து சான்று பெறுவது, விதைப்பண்ணை பதிவு, பருவத்திற்கேற்ற ரகங்கள் குறித்து விதைச்சான்று உதவி இயக்குநர் சிங்காரலீனா பேசினார்.செல்லம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் செல்வராஜ், விதைச் சான்று அலுவலர் விஜய்குமார், உதவி விதை அலுவலர் இளங்கோ உட்பட பலர் பேசினர். வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் சண்முகப்ரியா ஏற்பாடுகளை செய்திருந்தார். 40 விவசாயிகள் பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை