உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதை பகிர்வு நிகழ்வு

விதை பகிர்வு நிகழ்வு

மேலுார்: கேசம்பட்டியில் தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு விதை பகிர்வு நிகழ்வு நடந்தது. நிர்வாகி ஜீவா வரவேற்றார். தலைவர் அன்னவயல் காளிமுத்து, தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தங்கம் அடைக்கண், மரபு வேளாண் செயற்பாட்டாளர் கிருங்கை திருமாறன், மரபு மருத்துவ செயல்பாட்டாளர் குமார் உள்ளிட்டோர் ‘என் உணவு என் விதை என் உரிமை’ குறித்து பேசினர். மரபு விதைகள் கண்காட்சி நடந்தது. விவசாயிகளுக்கு சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வை நிர்வாகி சரண் ஒருங்கிணைத்தார். நிர்வாகி கணபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை