உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாகனங்கள் பறிமுதல்

வாகனங்கள் பறிமுதல்

திருமங்கலம் : திருமங்கலம் வாகைக்குளம் கண்மாயில் அனுமதியின்றி சரளை மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. வி.ஏ.ஓ., அழகுராஜா மற்றும் சிந்துபட்டி போலீசார் அழகுசிறை - வாகைக்குளம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகள், ஒரு மண் அள்ளும் இயந்திர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது சரளை மண் திருடி கடத்தியது தெரிந்தது. அவ்வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அலெக்ஸ், அதிர்ஷ்ட காமன், கணேசன், ஜெயக்காமன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ