உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் தன்னிறைவு தமிழகம் கருத்தரங்கு

தண்ணீர் தன்னிறைவு தமிழகம் கருத்தரங்கு

மதுரை : மதுரையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம், பொறியாளர் சங்கம், உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில் 'தண்ணீர் தன்னிறைவுத் தமிழகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.முன்னாள் தலைமைப் பொறியாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் ரமேஷ் துவக்கி வைத்து பேசினார். மூத்த பொறியாளர் சங்க மாநில செயலாளர் வீரப்பன் கருத்தரங்கு நோக்கம் குறித்து பேசினார்.இதில் முன்னாள் தலைமை பொறியாளர் பைந்தமிழ்ச் செல்வன் 'வையை ஆறு மற்றும் கிளை ஆறுகளை மீட்டல்' குறித்தும், முன்னாள் தலைமை பொறியாளர் ஞானசேகர், 'தாமிரபரணி நதி மேம்பாட்டு திட்டங்கள்' குறித்தும், முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் முத்துவிஜயன், 'நீர்வள செயல்திட்ட மேலாண்மை உத்தி' என்ற தலைப்பிலும் பேசினர். சங்க செயலாளர் ரெங்கன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ