| ADDED : ஜூன் 02, 2024 03:58 AM
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் மெல்லிய உடல்வாகை பெறுவதற்கான இருவார கால 'ஸ்லிம் யோகா' பயிற்சி வகுப்பு நாளை (ஜூன் 3) துவங்குகிறது.தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் இருபாலருக்கும் தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், பெண்களுக்கு அருகில் உள்ள டாக்டர் பாலாஜி நர்சிங் ேஹாமில் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையும் நடக்கிறது.தேவையற்ற கொழுப்பை கரைத்தல், உடல் எடையை குறைத்தல், சீரான உடல் வாகை பெற உடல் தளர்வு பயிற்சிகள், ஆசனங்கள், ஓய்வு உத்திகள் கற்றுத்தரப்படும். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.