உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தொழில் நிறுவனங்கள் பதிவு சிறப்பு முகாம்

தொழில் நிறுவனங்கள் பதிவு சிறப்பு முகாம்

திருமங்கலம் : இந்தியா முழுவதும் உள்ள சிறு,குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெருந்தொழில் நிறுவனங்கள் ஆண்டுக்கு 40 சதவீதம் அளவிற்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதற்கு சிறு, குறு, பெரும் நிறுவனங்கள் 'ஜெம்' போர்ட்டலில் பதிவு செய்திருக்க வேண்டும்.இதற்கான சிறப்பு முகாம் நேற்று கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க அரங்கில் தொழில் துறை ஆணையர் நிர்மல்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் சங்க தலைவர் ரகுநாத ராஜா வரவேற்றார். பொதுச் செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் நன்றி கூறினார்.நேற்றைய முகாமில் 150 நிறுவனங்கள் பதிவு செய்தன. சங்கத் தலைவர் ரகுநாத ராஜா கூறுகையில், 'முகாமில் பதிவு செய்யாத சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் அதற்கான ஆவணங்களுடன் வந்து இலவசமாக பதிவு செய்யலாம் என்றார். ஆவணங்கள் குறித்தும், பதிவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ரகுநாதராஜாவை 99430 32112 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை