உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு நீதிமன்றம் உத்தரவின்படி சமையல் கலைஞர் மீது போக்சோ

சிறப்பு நீதிமன்றம் உத்தரவின்படி சமையல் கலைஞர் மீது போக்சோ

மதுரை, ; மதுரையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சமையல் கலைஞரான தந்தை மீது சிறப்பு நீதிமன்றம் உத்தரவின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கேரள மாநிலம் தேக்கடியைச் சேர்ந்த 48 வயதுக்காரர் கேரளா சுற்றுலா கழகத்தில் சமையல் கலைஞராக உள்ளார். இவரது மனைவி மதுரையில் வசிக்கிறார். மகன், மகள் உள்ள நிலையில் சமையல்கலைஞர் 2வது திருமணம் செய்து கொண்டார். மதுரை வரும்போதெல்லாம் போதையில் மனைவியை துன்புறுத்தினார். மேலும் மகளிடம் ஆபாசமாக பேசியதுடன் பாலியல் தொந்தரவும் கொடுத்தார்.இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசில் மனைவி புகார் செய்தார். பின் சமையல் கலைஞர் கேட்டு கொண்டதால் புகாரை மனைவி வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து மீண்டும் மனைவியை அவர் துன்புறுத்தினார். மேலும் மகள் அலைபேசியில் இருந்து சக மாணவர்களுக்கு அவரது பெயரில் 'சாட்டிங்' செய்தார். இதுகுறித்து 'போக்சோ' வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனைவி புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின்படி சமையல்கலைஞர் மீது தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை