உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேச்சுப்போட்டி முடிவுகள்

பேச்சுப்போட்டி முடிவுகள்

மதுரை : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடந்தன.பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் சேக்கிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் நவநீதகிருஷ்ணன், வில்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஆஷாதேவி நடுவர்களாக பணியாற்றினர். இதில் நரிமேடு ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆதிஷாந்த் முதல் பரிசு, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரக்சனா தாபியா 2ம் பரிசு, சக்குடி கல்யாணி மெட்ரிக் பள்ளி மாணவன் ஹேமன் 3ம் பரிசு வென்றனர். உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா, சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜீவிதா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில் மீனாட்சி அரசு பெண்கள் கல்லுாரி இணை பேராசிரியர் வளர்மதி, திருமங்கலம் அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் புனிதா, மேலுார் அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தமிழரசி நடுவர்களாக பணியாற்றினர். இதில் தியாகராஜர் பொறியியற் கல்லுாரி மாணவன் சுபநிதி சுப்ரமணி முதல் பரிசு, அரசு சட்டக்கல்லுாரி மாணவன் அருண் 2ம் பரிசு, திருமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவி சங்கீதா 3ம் பரிசு வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை