உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முடங்கி கிடக்கும் உரமாக்கும் மையம்

முடங்கி கிடக்கும் உரமாக்கும் மையம்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி மயானம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அங்கு மக்கும் குப்பையை உரமாக்க இயந்திரங்கள் மூலம் உரமும் தயாரிக்கப்பட்டு வந்தது.சில மாதங்களுக்கு முன்பு இயந்திரம் பழுதடைந்தது. மக்கும் குப்பையை பணியாளர்கள் கைகளால் உரமாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு மையத்தின் அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் சேதமடைந்ததால், மையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது.இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அங்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மின்சாரமின்றியும் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதியும் இல்லை. உரமாக்கும் மையத்திற்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும், இயந்திரங்களை சீரமைக்கவும் நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்