மாநில ஜிம்னாஸ்டிக் போட்டி
மதுரை : சென்னையில் நடந்த மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை மாவட்ட மாணவர்கள் 12 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கத்துடன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். டால்பின் மெட்ரிக் பள்ளி முகமது இப்ராஹிம், கேந்திரிய வித்யாலயா பள்ளி யோகிதா, மதுரை பப்ளிக் பள்ளி வருண், விகாசா பள்ளி அக்சரா, சி.இ.ஓ.ஏ., பள்ளி வர்ஷினி, ரித்திகா, வேலம்மாள் பள்ளி சுதிஷ்கா, ஒய்.எம்.சி.ஏ., பள்ளி மகாலட்சுமி, சித்து மெட்ரிக் பள்ளி கசிஷ், மாசாத்தியார் பள்ளி ஜாபினா ரீமாஸ், மஞ்சனக்கார மாநகராட்சி பள்ளி முகமது ரீனாப், மகாத்மா பள்ளி வர்ஷிகா தங்கப்பதக்கம் வென்றனர். மகாத்மா பள்ளி தக் ஷின மீனா, ஆத்விகா, அக்சரா, சித்து பள்ளி ஹிரண்யா வெள்ளிப்பதக்கமும், மகாத்மா பள்ளி தமிழினி வெண்கல பதக்கமும் வென்றனர். ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளர் கருணாகரன், பயிற்சியாளர் ரோகித் மாணவர்களை பாராட்டினர்.