உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில நீச்சல் போட்டி: மதுரை வீரர்கள் அசத்தல்

மாநில நீச்சல் போட்டி: மதுரை வீரர்கள் அசத்தல்

மதுரை, : திருநெல்வேலி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் மதுரை வீரர், வீராங்கனைகள் 17 பதக்கங்களை வென்றனர்.குரூப் 1 பெண்கள் பிரிவில் கேப்ரன்ஹால் பள்ளி வர்ஷினி 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி பதக்கம், 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். குரூப் 3 பெண்கள் பிரிவில் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தான்யாஸ்ரீ 50 மீ. பட்டர்பிளை, 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் தங்கம், 50 மீ. பேக் ஸ்ட்ரோக் , 50 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளி பதக்கம், 100 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றார். குயின்மேரி பள்ளி மிருதுளா 200 மீட்டர் ஐ.எம். பிரிவில் வெண்கலம் வென்றார்.குரூப் 5 பெண்கள் பிரிவில் ஜெயின் வித்யாலயா பள்ளி நேசா சிங், மகாத்மா பள்ளி தர்ஷினி, ஹரிணி நட்சத்திரா, சி.இ.ஓ.ஏ., பள்ளி சாய் சம்ரிதா ஆகியோர் 4 × 50 ப்ரீஸ்டைல் ரிலே, 4 × 50 மிட்லே ரிலே வெள்ளி பதக்கம் வென்றனர். குரூப் 8 பெண்கள் பிரிவில் விகாசா பள்ளி ஹர்ஷிகா 25 மீ., பட்டர்பிளை பிரிவில் வெண்கலம் வென்றார்.வெற்றி பெற்றவர்களை மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் செல்வபிரசன்னா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை