உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி

முதல்வருக்கு மாணவி கடிதம் ஜரூராக நடக்கும் ரோடு பணி

உசிலம்பட்டி: 'உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் அன்னம்பாரிபட்டி வரையிலான ரோடு மேடுபள்ளங்களாக இருப்பதால் சைக்கிளில் செல்ல முடியவில்லை. சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அன்னம்பாரிபட்டி 9ம் வகுப்பு மாணவி இளமதி, முதல்வருக்கு எழுதிய கடிதம் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.'நிதி ஒதுக்கவில்லை' என்றுக்கூறி சீரமைக்காமல் இருந்த நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி ரோட்டை சீரமைத்தனர். ஏற்கனவே ஜல்லி துகள்களை கொட்டியதால்தான் மேடு பள்ளம் அதிகமாகி துாசி கிளம்பியது. அதுபோல் தற்போதும் பணிகள் நடப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !