உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

கோடை மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் விவசாயிகள் கோடை உழவிற்கான ஆயத்த பணிகளை துவக்கியுள்ளனர்.விவசாயிகள் ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம். இந்தாண்டு மழை இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும், மானாவாரி விவசாயிகள் பணிகளை துவக்கவில்லை.அவர்கள் கூறியதாவது: இந்தாண்டு மழை பெய்யும் என நம்பிக்கையில் பலர் கோடை உழவு செய்தனர். ஆடி 18 நடவிற்காக விதை நெல், காய்கறி விதைகள் வாங்கி வைத்து தயாராக இருந்தோம். ஆனால் மழை பெய்யவில்லை. ஆழ்குழாய், கிணறுகளில் தண்ணீர் இருந்தவர்கள் மட்டும் பயிரிட்டுள்ளனர். கடும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் நெல், காய்கறி பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு நஷ்டம் ஏற்படும் என பயந்தோம்.தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து பயிர்களுக்கும் உதவியாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடை உழவிற்கு உதவியாக இருக்கும். இதனால் ஆயத்த பணிகளை துவக்கி உள்ளோம்என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ