உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.2,000 லஞ்சம்; சர்வேயர் கைது

ரூ.2,000 லஞ்சம்; சர்வேயர் கைது

பேரையூர் : மதுரை நரிமேடு ஜோதி, பேரையூர் தாலுகா சேடபட்டி பிர்காவில் சர்வேயராக பணிபுரிகிறார். இவரிடம் சின்னகட்டளையைச் சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர், நில அளவீடு சான்று கேட்டுள்ளார். அதற்கு லஞ்சமாக 2,000 ரூபாய் தருமாறு ஜோதி கேட்டார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராமசாமி புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின்படி நேற்று மதியம் 2:30 மணிக்கு சேடப்பட்டி பஸ் ஸ்டாப்பில், ராமசாமியிடம் 2,000 ரூபாயை ஜோதி வாங்கியபோது டி.எஸ்.பி., சத்தியசீலன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பேரையூர் தாலுகா அலுவலகத்தில் வேலை செய்து விட்டு, மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறி உசிலம்பட்டிக்கு பஸ் ஏறினார். அலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து சேடப்பட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ராமசாமியிடம் லஞ்சம் பெற்ற போது பிடிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ms Mahadevan Mahadevan
ஆக 13, 2024 17:36

பணம் பணம் அது இல்லையென்றால் .... என்று ஆக்கிய சமுதாயத்தை என்னவென்று சொல்ல. பக்கத்து வீட்டுக்காரன் வாங்கினால் நாமும் வங்க நெனிப்பதன் எதிரொலி


Mani . V
ஆக 13, 2024 05:07

லட்சங்களில் லஞ்சம் வாங்காமல் ஆயிரத்தில் லஞ்சம் வாங்கி அனைத்து அரசுப்பணியாளர்களையும் கேவலப்படுத்திய இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


முக்கிய வீடியோ