பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட் ரத்து
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் 150 கட்டடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பில் ரூ.ஒன்றரை கோடி முறைகேடு செய்ததாக 5 பில் கலெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதை ரத்து செய்ய மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாநகராட்சி உதவி கமிஷனர்கள் குழு விசாரணை நடத்தியது. அதன் அறிக்கை அடிப்படையில் பில் கலெக்டர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக மேல் விசாரணை நடத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.