உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் பிடிமண் எடுத்தல்

குன்றத்து கோயிலில் பிடிமண் எடுத்தல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று (மார்ச் 5) காலை 9:15 மணி முதல் 9:45 மணிக்குள் நடக்கிறது.நேற்று மாலை மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர் சரவண பொய்கை புறப்பாடாகினர். அங்கு பூஜை முடிந்து பிடிமண் எடுத்து வரப்பட்டு கோயிலுக்குள் யாகசாலை நடக்கும் இடத்தில் வைத்து பாலிகை பூஜை முடிந்து அனுக்ஞை விநாயகர் முன்பு அனுக்ஞை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.

துாய்மைப்பணி

தங்க கொடிமரம், யாகசாலை பூஜைக்கான வெள்ளி பொருட்கள், அனைத்து மண்டபங்களிலும் துாய்மைப்பணி நடந்தது. கோயில் முன்மண்டபம், ராஜகோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ