உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாலுகா அலுவலகம் முற்றுகை

தாலுகா அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி : செல்லம்பட்டி ஒன்றியம் ஆனையூர்-பூதிப்புரம் வரையிலான ஒன்னரை கி.மீ., பாதை கண்மாய்கரை மற்றும் ஓடை வழியாகச் செல்கிறது. காலம் காலமாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து தங்கள் நிலத்தின் வழியாக செல்லக்கூடாது என தடுப்பதாக கூறி ஆனையூர், பொட்டல்பட்டி, பூதிப்புரம், கட்டக்கருப்பன்பட்டி கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். தீர்வு கிடைக்காததால் நேற்று காலை பள்ளிக் குழந்தைகளுடன் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஓடையை அளவீடு செய்து பாதையை சரிசெய்து தருவதாக சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை