உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

தமிழ்க்கூடல் நிகழ்ச்சி

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் கீழ் செயல்படும் சங்கத்தமிழ் காட்சிக்கூடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க தமிழமுதம் என்ற தலைப்பில் இளமனுார் அரசுப் பள்ளி ஆசிரியர் மகேந்திரபாபு பேசினார். அவர் பேசுகையில், சங்க இலக்கியம் என்பது பழமையான நுால்களின் தொகுப்பு மட்டுமல்ல; தமிழரின் அறம், காதல், வீரம், மனிதநேயத்தை உலகிற்கு சொல்லும் அரியவகை நுால்களாகும், என்றார். சங்கத்தமிழ் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். இதில் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம், மதுரை மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை