உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலஅளவைத்துறையில் தமிழ்நிலம் புதிய செயலி

நிலஅளவைத்துறையில் தமிழ்நிலம் புதிய செயலி

மதுரை: தேசிய தகவல் மையம் (நிக்) உருவாக்கியுள்ள 'தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையின் www.tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பொதுமக்களுக்கான பல வசதிகள் உள்ளன.பட்டா மாறுதல் 'தமிழ் நிலம்' அலைபேசி செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்தும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு, உட்பிரிவில்லா பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்களைக் கொண்டுவர ஏதுவாக 'கொலாப்லேண்ட்' மென்பொருள் உருவாக்கப்பட்டு இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க, பதிவேடு, புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் இணையவழி சேவை www.eservices.tn.gov.inஇணைக்கப்பட்டுள்ளது.ஸ்கேன் செய்யப்பட்ட கிரம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், ஊராட்சிகள், நகராட்சியின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு, அளவு மாற்றங்கள் போன்ற விவரங்களை அறியலாம்.பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இணையதளம் மற்றும் தமிழ்நிலம் செயலி மூலம் நிலஅளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Govindaraj Pavadai
ஜூன் 28, 2024 23:46

தமிழ் நிலத்தில் விடுபட்டுள்ளதை எப்படி விண்ணப்பிப்பது நீங்கள் கூறியிருக்கும் கருத்து சரியானதாக இருக்குமேயானால் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை நத்தம் சாப்பிடுற அனைத்து வரிமனே யூடியுப் பட்டாவில் உள்ளது ஆனால் நத்தம் கணக்கில் காலி மனை என உள்ளது இதை எவ்வாறு பட்டா மாற்றம் செய்யலாம்


புதிய வீடியோ