உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாலகம் முதுகெலும்பு போன்றது தலைமை நீதிபதி பேச்சு

நுாலகம் முதுகெலும்பு போன்றது தலைமை நீதிபதி பேச்சு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்கத்தில் டிஜிட்டல் நுாலகத்தை நிர்வாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நவீன கருத்தரங்கு அறையை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து பேசியதாவது: மதுரை எனில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு, சக்திக்கு மீனாட்சி அம்மன், நீதிக்காக போராடிய சிலப்பதிகார கண்ணகி. வீரம், சக்தி, நீதி சேர்ந்ததுதான் மதுரை மண். தாத்தாக்கள், தந்தையர்கள் வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக இருந்த குடும்ப பின்புலத்திலிருந்து சிலர்தான் வழக்கறிஞர், நீதிபதிகளாக வருகின்றனர். 90 சதவீதம் பேர் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள். நுாலகம் முதுகெலும்பு போன்றது. இதை இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்தி, கடினமாக உழைக்க வேண்டும். தினமும் கற்க வேண்டும் என்றார். முன்னதாக சங்க தலைவர் ஐசக்மோகன்லால் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை