உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வறண்டு வரும் சாத்தையாறு அணை; தேர்தலுக்கு பின் துார்வாரப்படுமா

வறண்டு வரும் சாத்தையாறு அணை; தேர்தலுக்கு பின் துார்வாரப்படுமா

பாலமேடு : வறண்டு வரும் சாத்தையாறு அணை துார்வாரப்படுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த அணை கஜா புயலால் 2018ல் நிரம்பியது. 2020ல் வரத்து ஓடை ஆக்கிரமிப்பை துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் அகற்றி நீரை அணைக்கு கொண்டு வந்தனர். பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் அணைக்கு நீர்வரத்து, மறுகால் என பாசன வசதிபெறும் 11 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கடந்தாண்டு இறுதியில் அணை மறுகால் பாய்ந்தது. பிப்., வரை மறுகால் நீர், பின் ஷட்டர் பழுதால் வெளியேறிய நீர் மூலம் கண்மாய்கள் பாசன வசதி பெற்றன. தற்போதைய வெயிலின் தாக்கத்தால் நீர் இருப்பு குறைந்து அணை வறண்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக அணையை துார்வார வேண்டும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பு தொடர்கிறது. சோழவந்தான் தொகுதி, தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்குறுதியில் அணையின் கோரிக்கை இடம் பெற தவறியதில்லை. தேர்தலுக்கு பின் அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ