உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாஸ் ஓவர் பாலத்திற்கு முன் கல்குவாரியால் பஸ்பமாகும் மலை

பாஸ் ஓவர் பாலத்திற்கு முன் கல்குவாரியால் பஸ்பமாகும் மலை

மதுரை: மதுரை வாடிப்பட்டி -- தாமரைப்பட்டி இடையே நான்கு வழிச்சாலையாக அமைகிறது 'அவுட்டர் ரிங் ரோடு'. இது வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டியில் வகுத்து மலை - வண்ணாத்தி கரடு நடுவே செல்கிறது.இதனால் வனவிலங்குகள் வாகனங்களின் இடையூறின்றி மலைகளுக்கு இடையே கடந்து செல்ல மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் வண்ணாத்தி கரடு பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியின் உச்சியில் உள்ள மரங்கள், மண், பயனற்ற கற்களை 3 மண்அள்ளும் இயந்திரங்கள் மூலம் பல நுாறு அடி உயரத்தில் இருந்து கீழே தள்ளுகின்றனர். இதில் மண்அள்ளும் இயந்திரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. கடந்த ஒரு வாரமாக மலையில் பறக்கும் செம்மண் புழுதியால் அப்பகுதியில் விவசாய பயிர்கள் பாதிப்பதுடன், ஆடிக் காற்றில் குடியிருப்பு பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்வனப் பகுதியில் வசிக்கும் உயிரினங்களை பாதுகாக்க 'பாஸ் ஓவர்' பாலத்திற்கு முன்பாகவே வண்ணாத்தி கரடு மலை பஸ்பமாகும் நிலை உள்ளது. மண் சரிவு விபத்து அபாயம் உள்ளதால் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி