உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பாலம், ரோடு பணிகளை தேர்தலுக்கு முன் முடிக்க உத்தரவு: இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்

மதுரையில் பாலம், ரோடு பணிகளை தேர்தலுக்கு முன் முடிக்க உத்தரவு: இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்

மதுரை: மதுரையில் 2 பாலங்கள், ஒரு வைகை வடகரை ரோடு பணிகளை 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகள் மற்றும் வைகை வடகரை பகுதியில் திண்டுக்கல் ரோடு பாலம் முதல் சமயநல்லுார் வரை 8 கி.மீ., புதிய ரோடு பணி நடக்கிறது. இவற்றில் மேலமடையில் ரூ.150 கோடி மதிப்பில் 1100 மீ., க்கு பணிகள் நடக்கின்றன. இதில் 28 துாண்களின் மீது 29 மேல் தள பகுதிகளை அமைக்க சிவகங்கை மெயின் ரோட்டை முற்றிலும் தடை செய்து ஜரூராக பணி நடக்கிறது. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடைய வாய்ப்புள்ளது.* கோரிப்பாளையம் சந்திப்பில் 3 கி.மீ.,க்கு ரூ.196 கோடி மதிப்பில் பணி நடக்கிறது. இதில் செல்லுார் பாலம் ஸ்டேஷன் பகுதி பிரிவில் மேல்தளம் அமைக்கும் பணி பெருமளவு நடந்துள்ளது. தேவர் சிலையில் இருந்து ஏ.வி.பாலம், மீனாட்சி கல்லுாரி பகுதி வழியாக 6 பில்லர்களும், ஆற்றுக்குள் 19 துாண்களும் அமைக்கப்பட உள்ளன. இப்பணியில் தமுக்கம் முன்பிருந்து தேவர் சிலை வரை மேம்பால துாண்கள் அமைத்து அதன் இருபுறமும் சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தி அமைக்க வேண்டும். இந்த இடத்தில்நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தனியார் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.* வைகை வடகரையில் சமயநல்லுார் வரை ரூ.176 கோடிக்கு புதிய ரோடு அமைக்கின்றனர். இந்த ரோடு பயன்பாட்டுக்கு வந்தால் பாத்திமா கல்லுாரி பகுதி ரோட்டில் நெரிசல் குறையும். இந்த பணியும் டிசம்பருக்குள் முடிய வாய்ப்பு உள்ளது.நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாரன்,சீதாராமன், ஆனந்த் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வர முனைப்பு காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

S.jayaram
பிப் 28, 2025 13:59

அய்யா நீங்கள் பால பணிகள் எப்போது முடிப்பீர்கள் என்பது பெரிதல்ல, இன்னும் 50 நாட்களில் சித்திரை திருவிழா துவங்க உள்ளது ஏற்கனவே கடந்த முறை கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் இறந்தது வரலாறு காணாதது, அப்போது எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்தபோதே, மாநகராட்சி, காவல்துறையின் தவறான நடவடிக்கைகளால் அது நடந்ததாக மதுரை மக்களால் இன்றளவும் பேசப்படுகிறது, ஆனால் இப்போது பாலப்பணிகளின் காரணமாக சுற்றுப் புற சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, இந்த vip க்கள் யாரும் இதில் கலந்துகொள்ளவும், அவர்களுக்கு தனிவழிகளை ஏற்படுத்தவோ அனுமதிக்காமல் மதுரை மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்யவேண்டும்,


JAHIR HUSSAIN
பிப் 25, 2025 21:38

MADURAI AIRPORT WHEN WILL BECOME INTERNATIONALSTATUS


Sankar Raman
பிப் 25, 2025 17:10

வைகை தென்கரை குரு தியேட்டர் முதல் நான்கு வழிச்சாலை வரை சாலை வேலை எப்போது நடக்கும்


P.S.GANESAN Ganesan
பிப் 25, 2025 12:29

விரகனூர் முதல் சக்குடி வரையிலான வைகை ஆற்றின் வடகரை ரோடும் இந்த திட்டத்தில் அடங்குமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை