| ADDED : ஜூலை 20, 2024 02:56 AM
உசிலம்பட்டி : தேனி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் நேற்று உசிலம்பட்டி சட்டசபை தொகுதி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 42 கிராமங்களில் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் முத்துராமன், சுதாகரன், உசிலம்பட்டி நகர் செயலாளர் தங்கப்பாண்டி, செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தொகுதி பார்வையாளர் மாரியப்பன் கென்னடி மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவும், வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் வேலை கிடைக்க முயற்சிப்பதாகவும் எம்.பி., உறுதியளித்தார்.அவர் கூறியதாவது: தினகரன் ஆரம்பத்தில் பா.ஜ., வை எதிர்த்து அரசியல் செய்தார். தற்போது அந்தர் பல்டி அடித்து கூட்டணியில் நிற்கிறார். தன்மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுபட பா.ஜ., கூட்டணியில் சேர்ந்துள்ளார். தமிழகத்தில் கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காமல் இருக்க முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்றார்.