உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெப்பக்குளம் குறுவட்ட பூப்பந்து

தெப்பக்குளம் குறுவட்ட பூப்பந்து

மதுரை, : தெப்பக்குளம் குறுவட்ட பள்ளிகளுக்கான பூப்பந்து போட்டி முடிவுகள்:14 வயது ஆடவர் பிரிவில் தியாகராஜர் மாடல் பள்ளி முதலிடம், விருதுநகர் இந்து நாடார் பள்ளி 2வது இடம் பெற்றன.17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தியாகராஜர் மாடல் பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி 2ம் இடம் பெற்றன. 14 வயது, 17 மற்றும் 19 வயது மாணவிகள் பிரிவில் நிர்மலா பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி 2ம் இடம் பெற்றன.வாலிபால் போட்டியின் 14 வயது, 17 மற்றும் 19 வயது மகளிர் பிரிவுகளில் நிர்மலா பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி 2ம் இடம் பெற்றன. 14 வயது ஆடவர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் தியாகராஜர் மாடல் பள்ளி முதலிடம், வி.எச்.என். பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தியாகராஜர் பள்ளி முதலிடம், சவுராஷ்டிரா பள்ளி 2ம் இடம் பெற்றன.கூடைப்பந்து போட்டி 14 வயது, 17 மற்றும் 19 வயது மகளிர் பிரிவில் நிர்மலா பள்ளி முதலிடம், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி 2ம் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ