உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி இருக்கு... இடம் இல்லை...

பள்ளி இருக்கு... இடம் இல்லை...

மேலுார் : எட்டிமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் இட வசதி இல்லாமல் முதல் மூன்று வகுப்புகள் ஓரிடத்திலும் 4,5 மற்றொரு இடத்திலும் 6- - 8ம் வகுப்புகள் மற்றொரு இடத்திலுமாக பள்ளி செயல்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: முதல் மூன்று வகுப்புகள் செயல்படும் பள்ளியின் சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்பறைக்கு முன் இரவில் சிலர் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். மறுநாள் மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்களே அகற்றுகின்றனர். மற்றொரு இடத்தில் 6 முதல் 8 வரை மாணவர்கள் படிப்பதற்கு மூன்று வகுப்பறைகள் உள்ளன. இதில் ஒரு வகுப்பறை 'ஹை டெக் லேப்' ஆக மாற்றியதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் திறந்த வெளியில் படிக்கின்றனர். மற்றொரு வகுப்பறை இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் தலைமையாசிரியரும், மற்றொரு பகுதியை மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இப்பள்ளியிலும் சுற்றுச்சுவர் கிடையாது என்றனர்.ஊராட்சி செயலாளர் பிரபு கூறுகையில், ''இரண்டு பள்ளியிலும் சுற்றுச் சுவர் கட்ட அளவீடு செய்து திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை