உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

மதுரை: கருமுத்து கண்ணன் நினைவு 'திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி'கள் வரும் ஜூலை 14 ல் ஏழு இடங்களில் நடக்கிறது.மதுரை தியாகராஜர் கல்லுாரிகளின் முன்னாள் தலைவர் கருமுத்து கண்ணன் நினைவாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாநில அளவில் இப்போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவிலும், கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடக்கிறது.இதில் பங்கேற்க தமிழகம், புதுச்சேரியில் இருந்து 1700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து ஜூலை 14ல் தமிழகத்தில் முதற்கட்ட போட்டிகள் மதுரை தியாகராஜர் கல்லுாரி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரி, திருச்சி தேசிய கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி. திருநெல்வேலி ம.தி.தா., ஹிந்து கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் பிரசிதி வித்யோதையா பள்ளி, சிவகங்கை மவுண்ட் லிட்ரா ஜி மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 மையங்களில் நடக்கிறது.மாநில அளவில் கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டிகள் ஜூலை 21 ல் மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடக்க உள்ளது.முதற்கட்ட போட்டிகளில் வெல்வோருக்கு முதல்பரிசு ரூ.2500, இரண்டாம் பரிசு ரூ.1500, மூன்றாம் பரிசு ரூ. ஆயிரம் வழங்கப்படும். இறுதிப்போட்டியில் வெல்வோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். ஜூலை 29 ல் தியாகராஜர் கல்லுாரியில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது என, செயலாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை