உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்வேலியில் இறந்தவர் உடல் கிணற்றில் வீசியோர் கைது

மின்வேலியில் இறந்தவர் உடல் கிணற்றில் வீசியோர் கைது

உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, தொட்டப்பநாயக்கனுார் அருகே கிணற்றுக்குள் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி இறந்ததற்கான அடையாளம் இருந்தது. விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பூதிப்புரம் வலையபட்டி ஆடு மேய்க்கும் தொழிலாளி முருகன், 38, எனத் தெரிந்தது. உசிலம்பட்டி நக்கலப்பட்டியில் உறவினர் சிங்கராஜாவிடம் இருந்து ஆடுகளை பெற்று, நேற்று முன்தினம் இரவு தொட்டப்பநாயக்கனுார் சென்றார். ஒரு ஆடு மட்டும் வழி தவறியது. அதை தேடி சென்றவர், குஞ்சாம்பட்டி கருப்பசாமியின் பப்பாளி தோட்ட மின்வேலியில் சிக்கி இறந்தார். அவரது உடலை இரவோடு இரவாக கருப்பசாமி உட்பட நால்வர் கிணற்றில் வீசினர். ஹரிபிரகாஷ், கலையரசனை போலீசார் கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை