மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆண்டு விழா
02-Feb-2025
திருநகர்,: மதுரை திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்துத்தேவர் 130வது ஜெயந்தி விழா, பள்ளியின் 68ம் ஆண்டு விழா, பெற்றோர் ஆசிரியர் கழக விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமை வகித்தார். தமிழாசிரியர் வரவேற்றார். பல்வேறு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டுப்புற கலைகள், மேற்கத்திய இசை நடன போட்டிகள் நடத்தப்பட்டன.200 பேர் பரிசு பெற்றனர். பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன் பரிசு வழங்கினர். கடந்தாண்டு பொதுத் தேர்வுகளில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ராஜபாளையம் லயன்ஸ் சங்க ஜெகநாதாராஜா, நடன குருநாதன் சொந்த செலவில் பரிசு வழங்கினர். முழு தேர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.முன்னாள் மாணவர் பேச்சாளர் ராமகிருஷ்ணனுக்கு தமிழ் கல்பதரு விருது வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சரவணன், ராஜகோபால், முத்துச்செல்வி தொகுத்துரைத்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.
02-Feb-2025