| ADDED : ஜூலை 29, 2024 06:44 AM
மதுரை: மதுரையில் த.மா.கா., தென் மாவட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சித் தலைவர் வாசன் தலைமையில் நடந்தது.அவர் பேசுகையில், கட்சியை சீரமைக்கவும், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் மீண்டும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி தொகுதி வாரியாக தலா ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். நவம்பர் இறுதியில் வட்டார, நகர், பேரூராட்சி தலைவர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார்.கூட்டத்தில் முன்னாள் எம்.பி.,க்கள் சித்தன், உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், விடியல் சேகர், ராஜகோபால், ராம்பிரபு, அமைப்பு செயலாளர் காந்தி, மாநில துணைத் தலைவர் முனவர் பாட்ஷா, மதுரை நகர் தலைவர்கள் ராஜாங்கம், நடராஜன், பாரத் நாச்சியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.