உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணமாக வழங்க வேண்டும்

பணமாக வழங்க வேண்டும்

மதுரை: 'கடன்களில் சிக்கி தவிப்பதால் பணமாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மதுரையில் நடந்த நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மதுரையை மையமாக கொண்டு செயல்பட்ட இந்நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களிடம் ரூ.பல கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர் தங்கள் பணத்தை மீட்பதற்காக பாதுகாப்பு நலச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் பாண்டிகோயில் அருகே நடந்தது. 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தலைவர் சங்கர், செயலாளர் மணிகண்டன் பேசுகையில் ஒன்றரை லட்சம் முதலீட்டாளர்கள் ரூ.பல கோடி பணத்தை ஏமாந்துள்ளோம். குடும்பங்கள் கடன் பிரச்னை உள்ளிட்டவற்றால்பொருளாதார ரீதியாக முடங்கி கிடக்கின்றன. போலீஸ், நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் பணமாக, இடமாக வழங்க முயற்சி எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பணமாக தான் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை