மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
மதுரை, : வ.உ.சி. பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.5) மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மதுரை சிம்மக்கல் சந்திப்பில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர், சமுதாயமக்கள் மாலை அணிவிக்க உள்ளனர்.சிம்மக்கல் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோரிப்பாளையத்தில் இருந்து அண்ணா சிலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் அண்ணா சிலை நெல்பேட்டை கீழவாசல் வழி செல்ல வேண்டும்.யானைக்கல் கல்பாலம் வழியாக வரும் வாகனங்கள் யானைக்கல் சந்திப்பு,- கீழமாசி வீதி, - தெற்குமாசி வீதி வழி செல்ல வேண்டும்.அரசரடி வழியாக வரும் வாகனங்கள் அரசரடி சந்திப்பு, டி.பி. ரோடு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் வழி செல்ல வேண்டும்.ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மற்றும் மேலப்பொன்னகரம் வழியாக வரும் வாகனங்கள் மதுரை கோட்ஸ், எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் திரும்பி புதுஜெயில் ரோடு வழியாக அரசரடி சந்திப்பு டி.பி. ரோடு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் வழி செல்ல வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.