உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரம் நடும் விழா

மரம் நடும் விழா

மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில், மரம் நடும் விழா நடந்தது.ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் தொகுத்து வழங்கினார். சமூக ஆர்வலர் பாஸ்கரன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயற்கை விவசாயி பிரசாந்த் இயற்கை விவசாயம், உற்பத்தி, சந்தைப்படுத்துதலில் ஏற்படும் சவால்கள் குறித்து விளக்கினார். அவருக்கு 'நம்மாழ்வார்' விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேவையான வேம்பு, புங்கை மரக்கன்றுகளை ராஜா வழங்கினார்.சிறுமி நளினா தன்னம்பிக்கை கவிதை வாசித்தார். கொடிக்குளம் ஊராட்சி தலைவர் திருப்பதி, காவலர் ரங்கநாதன், ஆலோசகர் ராகேஷ், சிலம்ப மாஸ்டர் பாண்டி, சமூக ஆர்வலர்கள் செல்வி, பாலா, ஸ்டெல்லா மேரி பங்கேற்றனர். உறுப்பினர் தாகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை