உள்ளூர் செய்திகள்

இருபெரும் விழா

மதுரை: மதுரையில் இலக்கிய இணையர் பேராசிரியர்கள் இரா.மோகன் -– நிர்மலா அறக்கட்டளை விருதுகள் வழங்கும் விழா, பேராசிரியர் நிர்மலா மோகனின் படைப்புலகம் 75ம் ஆண்டு பிறந்தநாள் ஆய்வுக்கோவை நுால் வெளியீட்டு விழா நடந்தது. பேராசிரியர் நிர்மலா மோகன்  வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் ராமராஜபாண்டியன் நுாலை வெளியிட்டார். அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி, உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் விருது வழங்கினர். காந்திகிராம பல்கலை முன்னாள் பேராசிரியர் குருவம்மாள் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். சிறந்த இலக்கியச் சீரிதழ் விருது பிரிட்டோ வளன் அரசனுக்கு வழங்கப்பட்டது.   பொறியாளர் சுரேஷ், முத்து இளங்கோவன், பேராசிரியர்கள் ராமசாமி, அருணகிரி, மும்தாஜ், ஓய்வு எஸ்.பி., மணிவண்ணன், டாக்டர் வெங்கடேஷ்வரன், வானதி பதிப்பகம் உரிமையாளர் ராமநாதன், கவிஞர் ரவி, பேராசிரியர்கள் ரவிசங்கர், செல்வராக்கு பங்கேற்றனர். அசோக்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை