உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடையின்றி குடிநீர் வினியோகம் கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

தடையின்றி குடிநீர் வினியோகம் கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

மதுரை: ''கோடையில் குடிநீர் வினியோகத்தை சுணக்கமின்றி வழங்க நடவடிக்கை தேவை'' என ஆய்வுக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் உத்தரவிட்டார்.மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமையில் நேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர் மதுகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர், ஆர்.டி.ஓ., ஷாலினி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் குடிநீர், வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது, கல்வி, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக கோடையில் குடிநீர் பிரச்னைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஒன்றியம், டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வாரியாக கேட்டறிந்தார். பெரும்பாலான ஒன்றியங்களில் குடிநீர் வினியோகத்தில் பிரச்னை இல்லை. இன்னும் 2 மாதங்களுக்கு பிரச்னை ஏதும் வரவாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறினர்.பல இடங்களில் குடிநீர் வாரியம் மூலம் மட்டுமின்றி, உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்தி வினியோகிப்பதாக தெரிவித்தனர். குடிநீர் குழாய்கள் சேதம், எந்தெந்த பகுதிக்கு வினியோகம் இல்லை எனக் கேட்டறிந்த சந்திரமோகன், கோடை துவங்கி பல நாட்களாகிவிட்டது. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் கோடை நீடிக்கும். கோடை முடியும் முன்பு குழாய் பதித்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.சில ஒன்றியங்களில் குறைந்த அழுத்தம் (பிரஷர்) உள்ளதால் கடைக்கோடி கிராமங்களுக்கு குழாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது என குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.அவர்களிடம், 'குடிநீர் வாரியமே திட்டத்தை வடிவமைத்தது. அதன்படி தண்ணீர் வழங்க வேண்டும். விரைவாக அதற்கு நடவடிக்கை எடுங்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ